வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச் சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின் முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன் மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே