வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின் தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின் புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல் என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே