வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப் பின்கொடுசென் றலைத்திழுக்கு() தந்தோ நாயேன் பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன் என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய் என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே