வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும் என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ திருச்சிற்றம்பலம் திருவருள் விழைதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்