வன்னி இதழி மலர்ச்சடையார் வன்னி எனஓர் வடிவுடையார் உன்னி உருகும் அவர்க்கெளியார் ஒற்றி நகர்வாழ் உத்தமனார் கன்னி அழித்தார் தமைநானுங் கலப்பேன் கொல்லோ கலவேனோ துன்னி மலைவாழ் குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே