வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே