வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே