வம்பனேன் பிறர்போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதஞ்சார் உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா உலகமும் வாழ்கவென் றிருந்தேன் செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம் செயவல்ல சித்தனே சிவனே நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே