வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங் கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே