வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான் செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும் வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ