வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே திரைங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துன் உருக அழுதழுது கரங்கொள் சிரத்தோ டியாஉன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே