வரமன் றலினார் சூழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல் பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான் பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே