வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள் சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச் சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில் பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும் பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத் திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே