வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வருபர உணர்ச்சியும் மாட்டாப் பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப் பராபர உணர்ச்சியும் பற்றா உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர் உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன் கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே