வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும் அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக் கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால் ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே