வருஞ்செல்லுள்() நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள் பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால் அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே