வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னரோ இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே