வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார் தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந் திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம் மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே டீயஉம -------------------------------------------------------------------------------- இன்பப் புகழ்ச்சி திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்