வருபயன் அறியா துழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் ஒருவரும் நினது திருவடிப் புகழை உன்னும்நாள் எந்தநாள் அறியேன் அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்பெறல் செல்வமே அமுதே குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே