வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும் வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும் உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை