வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய் திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால் கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம் உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே