வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம் இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர் உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே