வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள் உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப் பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப் பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்