வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம் பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே