வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள் மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும் வந்தெனை எடுத்திலார் அவரும் இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான் என்செய்வேன் என்னுடை அருமை நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும்இங் கறிந்திலை யேயோ