வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்