வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்றதுபோலக் கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை மலிய உண்டிட வருகின்றேன் வருமுன் மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே