வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது மலர்அடி மனம்உற வழுத்தாப் புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால் உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன் சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே தணிகைவாழ் சரவண பவனே