வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே