வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல் எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சனனப் பெருவேரைக் கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே