வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக் களங்கம்இ லாதக ருத்துடை யானைக் கற்பனை முற்றும்க டந்துநின் றானை உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை இளம்பிறை சூடிய செஞ்சடை யானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே