வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான் குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ