வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய் வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும் தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித் தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய் உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும் ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில் அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி