வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர் திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே