வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின் வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின் னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ