வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியைக் கண்டனம் மனமே அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் கள்எலாம் உண்ட வண்டென இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே