வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்