வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை வஞ்சகன்என் றேமறுத்து வன்கணாநீ போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத் தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே