வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார் நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண் தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே