வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும் போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும் போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே