வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ