வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான் ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ என்செய்வேன் என்னையே உணர்ந்து தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் தொட்டிலும் ஆட்டிடு கின்றாள் ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய்