வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும் ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த் தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே