வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித் தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச் சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப் பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே