வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே வெடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே நீடயில் படைசேர் கரத்தனை அளித்த திருத்தனே நித்தனே நிமலா ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே