வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார் ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன் தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக் கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே