வாடு கின்றனன் என்றனை இன்னும் வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப் பாடு கின்றனன் பாவியேன் என்னைப் பாது காப்பதுன் பரம்அது கண்டாய் தேடு கின்றமால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவரும் பொருளே சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே