வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம் மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத் தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில் சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம் ஆட்க ணேசுழல் அந்த கன்வரில் அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன் நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ் நாய காதிருத் தணிகை நாதனே