வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன் தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய் கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே