வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன் சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேதான் நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால் கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன் குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே